இது தமிழ் ⚡ AMP

ஜூன் 2 வெளியாகிறது ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

By Dinesh R | May 14, 2023

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்தப் படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் வித்தியாசமான தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்; வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்; வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் உலகமெங்கும் ஜீன் 2 ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.