இது தமிழ் ⚡ AMP

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

By Dinesh R | Aug 12, 2024

ஷாருக் கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், ஆப்ராம் கானும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாஸா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் பேரி ஜென்கின்ஸின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவில் டிசம்பர் 20, 2024 அன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கெளரவ பூமியின் கடைசி ராஜாவான முஃபாஸாவின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இப்படம். இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், அப்ராம் கானும் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தி லயன் கிங் எனும் லைவ்-ஆக்ஷன் படம், 2019 இல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக்கான் முஃபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார். காட்டு ராஜாவைக் காணப் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறார். இம்முறை, ஷாருக்கான் தவிர, அவரது மகன்கள் ஆர்யன் கான் சிம்மவாகவும், ஆப்ராம் கான் இளைய முஸாபாவாகவும், தங்களது குரல் வளத்தை வழங்கியுள்ளனர்.

படத்தைப் பற்றி ஷாருக்கான், “முஃபாசா ஒரு ஒப்பு உயர்வில்லாத மரபு மற்றும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. காட்டின் ராஜா முஃபாசா தனது ஞானத்தை அவரது மகன் சிம்பாவுக்கு வழங்குகிறார். நான் அவருடன் ஆழமாகத் தொடர்பு கொள்கிறேன். முபாஸாவின் இளமைக் காலம் தொட்டு காட்டு ராஜாவாக உருவாகி சாதனைகள் புரியும் காலம் வரை அந்தக் கதாபாத்திரத்தை குரல் வடிவாக வழங்கியது அருமையானதொரு அனுபவம். டிஸ்னியுடன் இது எனக்கு ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு. குறிப்பாக என் மகன்கள் ஆர்யன் மற்றும் ஆப்ராம், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், இந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார்.

டிஸ்னி ஸ்டார் ஸ்டுடியோஸின் தலைவர் பிக்ரம் துகல், “உன்னதமான முஃபாஸா ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை விட, அவர் தொடர்ந்து செயல்படும் ஒரு அவதார நாயகனாக வலம் வருகிறார். ஷாருக்கான் மற்றும் ஆர்யன் கானைத் தவிர வேறு யாரையும் எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை. முஃபாஸாவின் உலகில், அவரும் அவரது மகன்களும் இணைந்துள்ளது வெகு விஷேசமான ஒரு செயல்பாடு. கோடிக்கணக்கான இந்தியப் பார்வையாளர்களுக்கான சிறப்பான ஒரு முயற்சி இது” என்றார்.

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பாத்திரங்களுக்குத் திரையில் உயிரளிக்க, லைவ்-ஆக்ஷன் திரைப்பட உருவகாக்க யுக்தியுடன், ஃபோட்டோ ரியல் கணினி உருவாக்க படங்கள் தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ளனர்.

‘முஃபாஸா: தி லயன் கிங்’ திரைப்படம், டிசம்பர் 20, 2024 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியத் திரையரங்குகளில் வெளியாகும்.