இது தமிழ் ⚡ AMP

லேடி சூப்பர் ஸ்டார் 2019

By Dinesh R | Aug 10, 2018

நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது என்றார் ஜமீல்.

“இந்தக் கதையையும் , திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்தக் கதையின் நாயகி அழகும் அறிவும் தீரமும் இளமையும் நிறைய பெற்றவள். ஹன்சிகா உரிமையுடன் இந்தக் கதாபாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளி வருவது எனக்கு மிகப் பெரிய பெருமை. தனுஷ் சார் தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்புத் துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரைச் சந்திக்க உள்ளது” என்கிறார் U.R. ஜமீல் நம்பிக்கையுடன்.