இது தமிழ் ⚡ AMP

மாயபிம்பம்‌ – படப்போஸ்டர் | சுந்தர்.சி வெளியீடு

By Dinesh R | Dec 06, 2025

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’ ஆகும்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

புதுமுக நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுக்க முழுக்கப் புதுமுகங்களே. படத்தின் பாடல்களைப் பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2005 இல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டுப் படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவைப் பாராட்டினார்.