இது தமிழ் ⚡ AMP

மனோரதங்கள் – சிக்கலான அக சுற்றுலா

By Dinesh R | Sep 01, 2024

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்தப் படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதையம்சம் கொண்டது.

1. ‘மனோரதங்கள்’ திரைப்படம், இலக்கிய உலகின் பிதாமகனான எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும்வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றிப் பார்வையாளர்களுக்கு ஒரு தரிசனத்தைத் தருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2. சினிமா மேஸ்ட்ரோக்கள் மற்றும் முன்னோடிகளான பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாமபிரசாத், மகேஷ் நாராயணன், ஜெயராஜன் நாயர், அஸ்வதி நாயர் மற்றும் ரதீஷ் அம்பாட் போன்ற ஆளுமை மிக்க இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த அற்புதமான படைப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் தனித்துவமான காட்சித் திறனையும் கதை பாணியையும் இந்தப் படைப்பில் கொண்டு வந்திருப்பதால், இந்தக் கூட்டு முயற்சி, பலதரப்பட்ட காண் அனுபவத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் மலையாளப் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பெரும் உரையாடல்களையும் தூண்டியுள்ளது.

3. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள், மூதாதையர் வீடுகள், பசுமையான வயல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் கல்பாதைகள் வழியாக கேமரா லாகவமாகப் பயணிக்கும்போது, ‘மனோரதங்கள்’ படத்தின் காட்சிக் கோர்வைகள் பார்வையாளர்களை எம்.டி.யின் அன்பான அரவணைப்பில், அவரின் உலகத்திற்குள் மூழ்கடிக்கிறது. இந்த ஆந்தாலஜியின் ஒளிப்பதிவு மற்றும் உருவாக்கம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும்.

4.மலையாள சினிமாவின் மிகச்சிறந்த திறமைகள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்காக ஒருங்கிணைந்துள்ளனர். திரை ஆளுமைகளான மம்மூட்டி, மோகன்லால், பன்முக நடிகரான ஃபஹத் ஃபாசில் மற்றும் பார்வதி திருவோத்து உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பங்கேற்பில், இந்த அற்புதமான கதைகள் உயிர்பெற்றுள்ளது. இந்த நட்சத்திரங்கள், நாயரின் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளைச் சிரமமின்றி வெளிப்படுத்தியுள்ளனர்.

5. மனித உறவுகளின் நுணுக்கங்களைப் பேசும் ஓர் ஆழ்ந்த உணர்ச்சிமிகு பயணம் தான் ‘மனோரதங்கள்’. பார்வையாளர்களை அவர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதைகளுக்குள் இழுத்து சென்றுவிடும். ல்லும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், மனித இயல்பின் சிக்கலான இருண்மையை ஆராய்வதற்கான ஒரு சினிமா டூர் இது.