இது தமிழ் ⚡ AMP

MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது

By Dinesh R | Apr 26, 2025

ஈதன் ஹன்ட் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே களமிறங்குகிறார். அவரது சாத்தியமற்ற மிஷனைக் காண சீட் பெல்ட்டினை இறுக்கிக் கட்டிக் கொண்டு தயாராகுங்கள். பாரமெளன்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ படத்தைத் திட்டமிட்டதை (மே 23) விட 6 நாட்கள் முன்னதாக, இப்போது மே 17, 2025 சனிக்கிழமை அன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் ஹண்டின் இறுதிப் பணியைப் பெரிய திரையில் காண அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஈதன் ஹன்ட்டின் கடைசி மிஷன் என்பதால், இப்படத்தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் ததும்பும் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாம் க்ரூஸின் கடைசி மிஷன், இருக்கையின் நுனியில் அமர வைக்கக் கூடிய அதிரடி ஆக்ஷனாகவும், கிளாஸிக்காகவும், அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாரமெளன்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கைடான்ஸ் இணைந்து டாம் க்ரூஸ் தயாரிப்பில், கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய “மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்” என்ற படத்தை வழங்குகின்றனர். இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், எசாய் மோரல்ஸ், போம் கிளெமென்டிஃப், ஹென்றி செர்னி, ஏஞ்சலா பாசெட், ஹோல்ட் மெக்காலனி, ஜேனட் மெக்டீர், நிக் ஆஃபர்மேன், ஹன்னா வாடிங்ஹாம், டிராமெல் டில்மேன், ஷியா விகாம், கிரெக் டார்சன் டேவிஸ், சார்லஸ் பார்னெல், மார்க் கேடிஸ், ரோல்ஃப் சாக்சன் மற்றும் லூசி துலுகார்ஜுக் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ படம், மே 17 – சனிக்கியழமை அன்று வெளியாகிறது. வாழ்க்கை, அதன் தேர்வுகள், அதிலிருந்து மாறுபடும் ஒரு மிஷனைக் கடைசியாக ஒருமுறை காணத் தயாராகுங்கள்.