இது தமிழ் ⚡ AMP

மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

By Dinesh R | Feb 19, 2019

தரமான நகைச்சுவை ரகளை நிச்சயம் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு டீசரை உருவாக்குவதற்கு நிறைய திறமையும் பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதைக் காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.

ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.