இது தமிழ் ⚡ AMP

இசையும் நடனமும் இணையும் #arrpd6

By Dinesh R | Mar 22, 2024

பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தனது அடுத்த முயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அவர்களது முதல் தயாரிப்பில், பிரபு தேவாவையும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானையும் இணைத்துள்ளனர். இந்தப் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS தயாரித்து, இயக்குகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தியத் திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்த உள்ளனர். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் இப்படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் என பிஹைண்ட்வுட்ஸ் நம்புகிறது.

இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்றும், இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று பிஹைண்ட்வுட்ஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் பங்காற்றுதைக் குறித்து, “சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும். அதை இப்போ செய்யலாம், பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும். இந்தத் திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்றார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

நடனப்புயல் பிரபு தேவா, “நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மனோஜ் NS, “இந்தத் திரைப்படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்” என்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மானும், பிரபுதேவாவும் 6 ஆவது முறையாக இணைவதைக் குறிக்கும்விதமாக #arrpd6 என தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் – இந்தியா படமாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர் பிஹைண்ட்வுட்ஸ்.