இது தமிழ் ⚡ AMP

தேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா

By Dinesh R | Nov 23, 2017

தேசிய விருது பெற்ற ஜோக்கர் இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான அவரது அண்ணன் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். ‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னுமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது, ரங்கா எப்படி இந்தப் படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தைச் சுவாரஷ்யமாகச் சொன்னார்.

“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும் சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம். அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது. இந்த அற்புதமான உணவுக்குக் காரணமான சமையற்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற, நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். இருவருக்கும் பிடித்துப் போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்கு பின் ஒப்புக் கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்”என்றார் ராஜுமுருகன்.

இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி; இசை ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு மாநகரம் செல்வம்; கலை சதீஷ்; சண்டை பில்லா ஜெகன். இந்தப் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.