இது தமிழ் ⚡ AMP

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

By Dinesh R | Oct 09, 2017

இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals).

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே!

“50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் கனவு’ என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அந்தக் கனவு, அமெரிக்காவின் உருவாக்கத்தில் மகத்தான பங்கை வகித்தது. அதைப் போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு! அதன் வெளிப்பாடுதான், Naturals Enable எனும் இந்த முயற்சி. நேச்சுரல்ஸின் 611 கிளைகளிலும் இந்த வருட இறுதிக்குள், மாற்றுத் திறனாளர்களைப் பெருமளவில் பணியில் அமர்த்தவுள்ளோம்” என்றார் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அதிபரான C. K. குமரவேல். Youth4JobsFoundation என்கிற ஓர் அமைப்புடன் இணைந்து, நேச்சுரல்ஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவியான மிதாலி ராஜ் இதனைத் துவக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “நல்ல மாற்றங்கள் உற்சாகத்துடன் தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு இம்மாதிரியான வேலை வாய்ப்புகள் நல்குவது என்பது பாராட்டத்தக்க ஒரு முயற்சி” என்கிறார் அவர். பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு! ODI போட்டிகளில் 6000 ரன்களை இவர் குவித்து உள்ளார்.

“இந்தியாவிலேயே , மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு நல்கும் ஒரு மாபெரும் நிறுவனமாக Youth4Jobs Foundation நிற்கும் இந்த வேளையிலே, இம்மாதிரியான ஒரு பணியில் நேச்சுரல்ஸுடன் இணைவது குறித்து மகிழ்ச்சி” என்கிறார், அதன் அமைப்பாளர் மீரா ஷெனாய்.