இது தமிழ் ⚡ AMP

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

By Dinesh R | Feb 19, 2020

சென்ற வாரம் வெளியான படங்களில் ‘ஓ மை கடவுளே’ படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, “வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்” என்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை இன்று படக்குழு நடத்தினார்கள். விழாவில் ஹீரோ அசோக் செல்வன் இயக்குநர் அஸ்வத், தயாரிப்பாளர் டில்லிபாபு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

– ஜெகன் சேட்