இது தமிழ் ⚡ AMP

ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

By Dinesh R | May 24, 2019

சுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன் பணத்தைப் பறிகொடுக்கிறான். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்காவது என உணர்ந்து, மண்ணுளி பாம்பு, நவரத்தினக் கல், சஞ்சீவி வேர் என சதுரங்கவேட்டையில் ஈடுபடுகிறான். அவன் நேர்மையாகத் தொழிலில் ஈடுபட்டானா அல்லது சதுரங்க வேட்டையில் வேட்டையாடப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘சீனி’ என்ற தலைப்பில்தான் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியான ஓவியாவிற்கு, ‘பிக் பாஸ்’ சீசன் 1-இல் கிடைத்த எதிர்பாராத புகழின் காரணமாக ஓவியா எனத் தலைப்பு மாற்றப்பட்டது. அதாவது, ‘வியாவ விட்டா யாரு’ என்று. பல நாள் கிடப்பில் இருந்து, மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெளியாகியுள்ள படம். KCR பிக்சர்ஸ் சார்பாக மதுரை செல்வம் தயாரித்துள்ளார்.

திவ்யா எனும் பாத்திரத்தில், தந்தி டிவி நிருபராக நடித்துள்ளார் ஓவியா. க்ளைமேக்ஸில், ஆபத்தில் சிக்கும் நாயகனை மீட்பதும் இவரே! நாயகனாய் நடித்துள்ள புதிய முகம் சஞ்ஜெய், பக்கத்து வீட்டுப் பையன் போல் நல்ல எனர்ஜியோடு இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், ‘றியா றியா பாக்குறியா’ பாடல் இளமைத் துள்ளலுடன் உள்ளது. அந்தப் பாடலில் வரும் ஆர்ட் வொர்க், கோரியோகிராஃபி, சஞ்ஜெய் மற்றும் ஓவியாவின் நடனம் என அனைத்துமே ரசிக்க வைக்கின்றன. 

மூன்று பொண்டாட்டிக்காரர் பாம்பு பரமசிவமாக ராதாரவி நடித்துள்ளார். மனிதனின் பேராசையே அவரது மூலதனம். அவரது அனுபவத்திற்கு, அல்வா சாப்பிடுவது போன்றதொரு பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். யானைப் பாகனாக செந்தில் நடித்துள்ளார். சின்னி ஜெயந்த், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், பருத்தி வீரன் சரவணன் ஆகியோரும் நகைச்சுவைக்கு உதவியுள்ளனர்.