இது தமிழ் ⚡ AMP

ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

By Dinesh R | Dec 08, 2022

உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில், தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்தவர் ஸ்ருதிஹாசன். மில்லியன் கணக்கிலான மக்களை பின்தொடர்பாளர்களாகக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். தன்னைப் பற்றிய செய்திகளையும், தன் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளே சான்று.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்குத் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. ஒரே நாளில், அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டைப் பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள், அம்மகிழ்ச்சியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும், நடிகை ஸ்ருதிஹாசன் ‘கே. ஜி. எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.