இது தமிழ் ⚡ AMP

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ – தீபாவளி வெளியீடு

By Dinesh R | Oct 05, 2022

டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகப் படம் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.