இது தமிழ் ⚡ AMP

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

By Dinesh R | Jun 08, 2019

2019இல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, ‘Rowdy Baby Song reaction’, ‘Rowdy baby Cover’ (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘Song reaction’ பற்றிக் குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களைப் பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகள் வரை இது பரவியிருக்கிறது. 500 மில்லியன் பார்வைகளைத் தாண்டி அடுத்த கட்ட சாதனைக்கான வேகமான பாய்ச்சலில் உள்ளது ரௌடி பேபி. இதை வைத்து பார்க்கையில் ரௌடி பேபி காய்ச்சலை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.

பாடலில் வரும் தாள இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மாயஜாலம், உலகளாவிய பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. இந்த ஆழ்ந்த கூறுகள் தான் ஒரு பாடலின் பிரம்மாண்ட வெற்றிக்கான மந்திரம். யுவன் ஷங்கர் ராஜா இதில் தனது திறமையை மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக நிரூபித்தவர். அது ஒரு வேகமான துள்ளலான பாடலோ அல்லது மெலடி பாடலோ, அவர் அதில் மாஸ்டராகத் திகழ்கிறார். மேலும், யுவன் எப்போதுமே ஒரு பாடலுக்கு ஏற்ற பாடல் வரிகள் மற்றும் குரல்களைச் சரியாக ஒருங்கிணைப்பதில் வல்லவர், அது தான் நமக்குள் ஒரு ‘திருவிழா’ உணர்வை உருவாக்குகிறது.

மேலும் ‘ரௌடி பேபி’ பாடலுக்கு ‘Poet-u’ தனுஷின் பாடல் வரிகளும் மின்சாரத்தைப் பாய்ச்சியிருக்கிறது. ‘தீ’ உடன் இணைந்து தனுஷ் பாடியதும் பாடலின் கூடுதல் ஈர்ப்புக்குக் காரணம். அற்புதமான அரங்க அமைப்பு, இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் நடன அசைவுகள் தான் இன்னும் உலகெங்கும் உள்ள அனைவரையும் இந்தப் பாடலுக்கு ஆட வைக்கிறது. நிச்சயமாக, தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் திரை பிரசன்னம் தான் ‘ரௌடி பேபி’ பாடல் உலக அளவில் வெற்றி பெற முக்கிய பங்காக இருந்திருக்கிறது.