இது தமிழ் ⚡ AMP

சத்தியவான் சாவித்திரி விமர்சனம் | Sathyavan Savithiri review

By Dinesh R | Nov 20, 2026

l

‘விதி’ எனும் பழைய படத்தின் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் கோர்ட் டிராமா படங்கள் பெரும்பாலும் வொர்க்கவுட் ஆகியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்தப்படம் எப்படி வொர்க் ஆகியுள்ளது?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கீர்த்தி சுரேஷுக்கு மிஷ்கின் போல பெரிய வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பது லட்சியம். அவரது அப்பாவும் மாமியாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கணவர் சப்போர்ட் செய்கிறார். அந்த சப்போர்ட்டின் அடிப்படையில் மிஷ்கினிடம் போய் ஜுனியராகச் சேர்கிறார் கீர்த்தி. ஒரு கட்டத்தில் குருவை எதிர்த்து வாதாட வேண்டிய சூழல் கீர்த்தி சுரேஷுக்கு வருகிறது. இங்குத் துவங்குகிறது சத்தியவான் சாவித்திரியின் யுத்தம்.

கதையின் நாயகியாக சிறந்த நடிப்பைத் தந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். எமோஷ்னல் காட்சிகளை விட காமெடி காட்சிகளில் செம்மயாக ஸ்கோர் செய்கிறார். மிஷ்கினுக்கு இந்தக் கேரக்டர் இடது கையால் டீல் பண்ணும் அளவிற்கு சிறியது. அதனால் அசால்ட் பண்ணுகிறார். பாலசரவணின் நகைச்சுவை பல காட்சிகளில் எடுபட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் கணவராக நடித்தவர் உள்பட பலரும் இயல்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சின்ன லொக்கேஷன்களில் கூடச் சிறப்பான ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இரைச்சலைக் குறைத்து இசையை வழங்கியுள்ளதே பெரிய ஆறுதல்.

காட்சிகள் எல்லாமே வெறும் வசனங்களாலே கடக்கிறது. பல நல்ல எமோஷ்னல் காட்சிகளும் அழுத்தமில்லாத கேரக்டர்களால் வீணாகி விடுகின்றன. முதற்பாதி படம் விலகி ஒன்றாமல் கடப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி பொருட்படுத்தத்தக்க வகையில் பயணிக்கிறது. ஆனால் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் பிரில்லியண்ட்!

சற்றே கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் அற்புதமான கோர்ட் டிராமாவாகக் கோலேச்சியிருக்கும்.

– வெண்பா தமிழ்