“ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, குண நலன், பராக்கிரமம் ஆகியவை அந்தக் கதாபாத்திரத்தின் ஆடை அமைப்பின் மூலமாக தான் ரசிகர்களுக்குட் சென்று அடையும். பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரியும் அனு பார்த்தசாரதி கிராமியப் படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியைப் பற்றி விவரிக்கிறார். வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றிப் பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்குத் தோதாக இருக்க வேண்டும். பொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கதை உருவாகும் காலக் கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குநர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியைச் சுலபமாக்கியது. சிவகார்திகேயன் இந்தப் படத்தில் தனது உற்சாகத்துக்குத்தோதான ஆடை அணிந்து இருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. இயக்குநர் பொன்ராமும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளைத் தேர்ந்து எடுத்தார்கள். இன்று எல்லோராலும் பெரிதளவு விவாதிக்கப்படும் அந்த இளவரசன் தோற்றத்துக்கு மிகவும் உழைத்தோம்.படத்திலுள்ள ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு பின்னணியில் படமாக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றவாறு உடைகள் தேர்ந்து எடுத்து பாடல்களைப் படமாக்கி உள்ளோம். குறிப்பாக அவருடைய அறிமுகப் பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவை. குழந்தைகள், இளைஞர்கள் எனப் பலரையும் கவர்ந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவருவார். செப்டெம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளிவர இருக்கும் ‘சீமராஜா’ வசூல் ராஜாவாக நிச்சயம் திகழ்வான்” என உறுதியாகக் கூறுகிறார் அனு பார்த்தசாரதி.
விளம்பரம்
VMTalks In-article Ad Slot