இது தமிழ் ⚡ AMP

ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

By Dinesh R | Sep 09, 2024

பிரபல வில்லன் நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள்.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில் சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:-

தயாரிப்பு நிறுவனம் – எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள் – ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள் – திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்கம் – பி.ரவிசங்கர்
இசை – ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு – விக்னேஷ் ராஜ்
படத்தொகுப்பு – விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பு – உல்லாஸ் ஹைதூர்
மக்கள் தொடர்பு – யுவராஜ்