இது தமிழ் ⚡ AMP

சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

By Dinesh R | Apr 30, 2018

விமர்சன ரீதியாகக் கவனிக்கப்படும் படங்களைக் கொடுக்கும் பிரியதர்ஷன், கலையம்சம் பொருந்திய படங்களைத் தருவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப் பயணத்தில், இன்னொரு வைரக்கல்லாகச் சேர்ந்திருக்கிறது அவர் இயக்கிய ‘சில சமயங்களில்’ திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்கச் சென்று சேரும் விதமான கதையைக் கொண்டிருப்பதால் இந்தப் பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார் டாக்டர் கணேஷ். இந்தப் படம் வரும் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.