இது தமிழ் ⚡ AMP

“மான் வேட்டை: ஸ்ரீகாந்த் தேவாவின் சிறப்பான இசை” – ரமேஷ் கண்ணா

By Dinesh R | Dec 16, 2022

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் ரமேஷ் கண்ணா, “இந்தப் படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.

R.K. சுரேஷ், “எனது நண்பன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவன் ஒரு கடின உழைப்பாளி. அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர். இதில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து இயக்கம் – M.திருமலை
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
>> வசனம் – வேலு சுப்பிரமணியம்
>> படத்தொகுப்பு – சுதா, லக்ஷ்மணன்
>> பாடல் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
>> மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்