இது தமிழ் ⚡ AMP

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்

By Dinesh R | Jan 05, 2017

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது..

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான்.

ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளைக் கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன் சுப்ரியாவைப் பிரிய நேரிடுகிறது.

சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளித் தனிமைப்படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது. தன்னைத் தனிமை படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறான் ரோஹன்.

நடிகர்கள்:

>> ஹ்ரிதிக் ரோஷன்
>> யாமி கெளதம்
>> ரோனித் ராய்
>> ரோஹித் ராய்
>> சுரேஷ் மேனன்

பணிக்குழு:

>> தயாரிப்பு – ராகேஷ் ரோஷன்
>> தயாரிப்பு நிறுவனம் – பிலிம் கிராப்ட் புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
>> இயக்கம் – சஞ்சய் குப்தா
>> இசை – ராஜேஷ் ரோஷன்
>> பாடல் வரி – குமார்
>> சண்டை – பீட்டர் ஹெய்ன்
>> கதை – விஜய் மிஷ்ரா
>> ஒலி – ரசூல் பூக்குட்டி
>> வசனம் – சஞ்சம் மசோம்
>> வெளியீடு – E4 எண்டர்டெய்ன்மென்ட்