இது தமிழ் ⚡ AMP

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

By Dinesh R | Dec 14, 2022

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. பாகுபலியின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டிய இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணியின் நட்புறவு, படத்தைத் தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அப்படி சமீபத்தில், நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

“@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான LA ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளைப் (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.

சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மனமார்ந்த வாழ்த்துகளைப் பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி, அதற்கு கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…🥰🤗”

ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்கப் படங்களில் இடம்பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களில் பிரபாஸின் பாகுபலியும் ஒன்றாகும்.

நடிகர் பிரபாஸ் அடுத்ததாக ‘சலார்’, கீர்த்தி சனோன் உடன் ‘ஆதிபுருஷ்’, தீபிகா படுகோனுடன் ‘ப்ராஜெக்ட் கே’ மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘ஸ்பிரிட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வரிசை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அவரது படம் திரையரங்கில் வரும் காலத்திற்காக இந்தியா முழுதும் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.