இது தமிழ் ⚡ AMP

ஜனகராஜ் நடிக்கும் ‘தாத்தா’ குறும்படம்

By Dinesh R | Mar 22, 2024

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் (Impress Films) சார்பாக, ‘சாக்லேட்’, ‘கொலை விளையும் நிலம்’ ஆகிய படைப்புகளை உருவாக்கியுள்ளார் பத்திரிகையாளர் S.கவிதா. இம்ப்ரஸ் ஃபிலிம்ஸின் அடுத்த படைப்பாக, மூத்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் அவர்கள் நடித்த ‘தாத்தா’ என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளனர். நரேஷ் இயக்கிய இப்படத்திற்கு, வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். கலை வடிவமைப்பை சமரும், உடைகளுக்கான பொறுப்பை வாசுகி பாஸ்கரும் கவனித்துள்ளனர்.

இந்தக் குறும்படத்தில், ரேவதி பாட்டி, ரிஷி, கயல் தேவராஜ், முருகன் மந்திரம், பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர் , ஆகியோர் நடித்துள்ளனர் . 16 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் விரைவில் short flix என்ற youtube தளத்தில் வெளியாக உள்ளது. தாத்தா குறும்படத்தின் டீசரை இன்று நடிகர் சூரி அவர்கள் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot