இது தமிழ் ⚡ AMP

THE END OF OAK STREET – மர்மமான நிகழ்வுகளும், எதிர்பாராச் சூழல்களும்

By Dinesh R | Jun 05, 2026

ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு, அதன் அக்கம்பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடிச் சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதைப் புரிந்து கொள்கிறது.

ஆன் ஹாத்தவே மற்றும் ஈவன் மெக்ரெகர் ஆகியோர் நடிக்கும் ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடித்துள்ளனர். டேவிட் ராபர்ட் மிட்ச்செல் எழுதி இயக்க, ஜே.ஜே.ஏப்ரம்ஸ், ஹானா மிங்கெல்லா, ஜான் கோஹென், டேவிட் ராபர்ட் மிட்ச்செல், மாட் ஜாக்சன் மற்றும் டாமி ஹார்ப்பர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்கள் க்றிஸ் பெண்டர், ஜேக் வீனர், ஜோஆன் லீ மற்றும் லீஆன் ஸ்டோன்ப்ரேக்கர் ஆவர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கேமராவுக்குப் பின்னால் மிட்ச்செலின் குழுவில் ஒளிப்பதிவு இயக்குநர் மைக்கேல் ஜியோலாகிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் மாயா ஷிமோகுச்சி, படத்தொகுப்பாளர் ஜான் ஆக்ஸல்ராட், இசையமைப்பாளர் மைகேல் ஜிக்கீனோ மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எரின் பெனக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இப்படத்தை வார்னர் ப்ராஸ் பிக்சர்ஸ் வழங்க, பேட் ரோபாட் தயாரிப்பு நிறுவனமும், ஜாக்சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க,  டேவிட் ராபர்ட் மிட்ச்செல் இயக்கியுள்ளார். வார்னர் ப்ராஸ் பிக்சர்ஸ் உலகமெங்கும் விநியோகிக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் திரையரங்குகளிலும் ஐமேக்ஸிலும் ஆகஸ்ட் 2026இல் வெளியாகிறது.