இது தமிழ் ⚡ AMP

சாயம் திரைப்படம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

By Dinesh R | Feb 08, 2022

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்தப் படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா (அபி சரவணன்) கதாநாயகனாக நடிக்க,  ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பைக் கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

சாயம் திரைப்படம் கடந்த  பிப்ரவரி 4  அன்று தமிழகமெங்கும்  90 திரையரங்குகளில் வெளியானது.  படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குநருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி  வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம்.

தென் மாவட்டங்களில்  நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று படத்தைப் பார்த்து வருகின்றனர். இதனால் பல  திரையரங்குகளில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத  பல தென் மாவட்ட  தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தைத் திரையிடத் துவங்கியுள்ளனர்.  படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர்), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு திரையரங்கம் என தியேட்டர் உரிமையாளர்களே தாமாக முன்வந்து கடந்த ஞாயிறு முதல் சாயம் படத்தைத் தங்களது திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றனர். இது போல தமிழகத்தில் பல காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாயம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.