இது தமிழ் ⚡ AMP

டைட்டானிக் விமர்சனம் | Titanic review

By Dinesh R | Nov 14, 2026

காதலும் கவுந்து போகும் என்ற உப தலைப்புடனும், ஜாலியான பாடலுடனும் படம் தொடங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ட்ரெயினில், விவசாயியான பூமிநாதன், சூர்யா, சந்துரு ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். மூவரும் தங்கள் காதல் கதைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த மூன்று காதலும் ஒரு திருமண நிகழ்வின் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைய, பிரதான கதாபாத்திரங்களின் மனநிலையும், அவர்கள் எடுக்கும் முடிவுமே படத்தின் கதை.

காவேரியாகக் கயல் ஆனந்தியும், ஷ்ருதியாக ஆஷ்னா சவேரியும், கிருஷ்ணவேனியாக ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். பள்ளி மாணவியாகப் பொருந்திப் போகிறார் கயல் ஆனந்தி. க்ளைமேக்ஸில் அவர் காதலைப் பற்றிப் பேசிச் சமாளிக்கும் இடத்தில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

சந்துருவாக ராகவ் விஜய் நடித்துள்ளார். பிரேக்-அப் ஆன ஒரே வாரத்தில் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துப் பெண் பார்த்து ஓகேவும் சொல்லி விடுகிறார். இருபது வயதில் பத்தாவது படிக்கும் பூமிநாதனாகக் காளி வெங்கட் நடித்துள்ளார். படத்தின் கலகலப்பிற்கும் பொறுப்பேற்கிறார். ஆறு வருடமாகக் காதலித்த பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்கும் சூர்யாவாகக் கலையரசன் நடித்துள்ளார். சந்துருவின் கல்யாணத்தில், மூவரும் தங்கள் காதலிகளைச் சந்திப்பது சுவாரசியம்.

திருமணத்திற்கு முந்தைய காதலைப் பற்றி மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என்பதைப் பற்றி அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார் எழுதி இயக்கியுள்ள M. ஜானகிராமன். ஜாலியான இரயில் பயண உரையாடலாகத் தொடங்கும் படம், ஏற்ற இறக்கமில்லாத நேர்க்கோட்டு டிராமாவாகவே பயணித்து முடிகிறது.