இது தமிழ் ⚡ AMP

வீர தீர சூரன் பார்ட் 2 – மார்ச் 27

By Dinesh R | Jan 22, 2025

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முன்னணி இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ‌.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி.எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். ஆக்சன் த்ரில்லர் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் க்ளிம்ப்ஸ், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.