இது தமிழ் ⚡ AMP

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

By Dinesh R | Jul 28, 2025

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது. தற்போது இந்தப் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கொண்டாட்டமான இப்பாடலைப் பாடலாசிரியர் டி. மோகன் குமார் எழுதியுள்ளார். பின்னணி பாடகர் சாய் சரண் பாஸ்கரூணி இந்தப் பாடலைத் தன்னுடைய இனிய குரலால் மெருகேற்றியுள்ளார்.

‘மிராய்’ படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி ‘மிராய்’ படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதையைக் கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் எட்டு மொழிகளில் ‘மிராய்’ வெளியாகிறது. மேலும் இந்தத் திரைப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.

நடிகர்கள்:-

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா
மனோஜ் மஞ்சு
ரித்திகா நாயக்
ஷ்ரியா சரண்
ஜெயராம்
ஜெகபதி பாபு

தொழில்நுட்பக் குழு:-

இயக்குநர் – கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள் – டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நிர்வாக தயாரிப்பாளர் – சுஜித் குமார் கொல்லி
இசை – கௌரா ஹரி
கலை  – ஸ்ரீ நாகேந்திர தங்கலா
எழுத்து – மணி பாபு கரணம்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹேஷ்டாக் மீடியா