இது தமிழ் ⚡ AMP

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

By Dinesh R | Oct 17, 2021

‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கை கோர்க்கின்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி கே. குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘இறைவி’, ‘இறுதி சுற்று’, ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘விடியும் முன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெரினா’ மற்றும் ‘நெற்றிக்கண்’ புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

‘கர்ணன்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பரியேறும் பெருமாள்’ புகழ் செல்வா ஆர்.கே., படத்தொகுப்பைக் கையாள, கே. ஆறுசாமி கலை இயக்கத்திற்கும், மகேஷ் மேத்யூ சண்டை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

‘விடியும் முன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் பாலாஜி கே. குமார், தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான கதைக் களத்துடன் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். “இந்தக் ‘கொலை’ திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்” என்கிறார் இயக்குநர்.

படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகளவில் தேவைப்படுவதால், பணியை விரைந்து முடிக்க சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் ‘கொலை’ திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.