இது தமிழ் ⚡ AMP

பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி

By Dinesh R | Mar 01, 2018

ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்தப் படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் ப்ரைவேட் லிமிடெட் (Rise East Entertainment Private Limited)’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு அனைவரையும் உடனே கவரும் ஒரு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிகப் பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர்.

நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவைத் தரும் விஜய் சேதுபதி ‘பேய் பசி’ படத்தின் இந்தப் பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்தக் கிளப் பாடலைத் தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளார். டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதைப் பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில் மதனின் கலை இயக்கத்தில் ‘#பய் பசி’ உருவாகிவருகிறது.