இது தமிழ் ⚡ AMP

ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

By Dinesh R | Dec 17, 2021

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது, அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினைத் தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.

‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’, ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம், மலிந்து கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. போலீஸ் என்றாலே அராஜகம் எனும் வெளிப்பார்வையில் இருந்து விலகி, காவல் நிலையத்திற்குள்ளாகவே இருக்கும் அதிகாரம், அழுத்தம், வலி எனும் புதிய கோணத்தைப் படம் திறக்கிறது.

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.