இது தமிழ் ⚡ AMP

ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும்

By Dinesh R | May 01, 2022

ஐ.எம்.டி.பி. (IMDB)-இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட ஜீ5 தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” இடம்பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ப்ரியாவின் ‘அனந்தம்’ அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து அம்சங்களும் அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ளன. பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் என பல காரணங்களுக்காக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

ஜீ5 இந்த இணையத் தொடர்களின் வெற்றியின் மூலம் ஹாட்ரிக் சாதனையைப் படைத்துள்ளது. இது தமிழ் இணைய தொடர்களின் களத்தில் இதுவரை நிகழ்ந்திராத ஓர் அதிசயமாகும். ரசிகர்களின் இத்தகைய நம்பமுடியாத அற்புதமான வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ5 அதன் பார்வையாளர்களுக்கு அற்புதமான உள்ளடக்கத்தைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஜீ5 தளத்தின் அடுத்த கட்ட புதிய வரவுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.