இது தமிழ் ⚡ AMP

அவர்களை என்ன செய்யலாம்?

By Dinesh R | May 19, 2010

நான் எப்பொழுதும்
சாத்தியமில்லாதவைகளின் மீதே
என் பிரியங்களை விதைப்பவன்
அறுவடைக்காக காத்திருப்பது
தவறுதான்

ஆதலினால் என்காதல்
செத்துப்போகும் என
ஒருவன் சவப்பெட்டி செய்கிறான்
இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான்
மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான்
அவன்கள் மனிதரூபத்தில்
உலவிக் கெடுக்கிறார்கள்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என்னறுவடை காலம் முன்பே
இடையில் அருத்தெடுக்க
வேண்டாத உறவில் நுழைந்து
என் நேசப்பயிரின் ஆயுளை
கெடுத்தழிக்கிறார்கள்

அவர்களை என்ன செய்யலாம்?

– சே.ராஜப்ரியன்