32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அவர்களை என்ன செய்யலாம்?

Dinesh R சேலம் Published: 19/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

நான் எப்பொழுதும்
சாத்தியமில்லாதவைகளின் மீதே
என் பிரியங்களை விதைப்பவன்
அறுவடைக்காக காத்திருப்பது
தவறுதான்

ஆதலினால் என்காதல்
செத்துப்போகும் என
ஒருவன் சவப்பெட்டி செய்கிறான்
இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான்
மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான்
அவன்கள் மனிதரூபத்தில்
உலவிக் கெடுக்கிறார்கள்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என்னறுவடை காலம் முன்பே
இடையில் அருத்தெடுக்க
வேண்டாத உறவில் நுழைந்து
என் நேசப்பயிரின் ஆயுளை
கெடுத்தழிக்கிறார்கள்

அவர்களை என்ன செய்யலாம்?

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க