உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்து, அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக் கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான அக்ஷரா.. அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
விளம்பரம்
நான் ஒரு பரத கலைஞர். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் ஹிந்தி பதிப்பான ‘ரேங் ரேஸ் (Rang Race)’ படத்தில் நடித்து உள்ளேன். எனக்குப் பிடித்த நடிகர் ஹாலிவுட் நடிகர் Bradley Cooper. பிடித்த நடிகை கரீனா கபூர். அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டுக்கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள். விளையாட்டுத்துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டுத்துறையில் உள்ளதனாலோ என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ்த்திரையுலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் ‘ என்கிறார் அக்ஷரா.