32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

admin சேலம் Published: 12/11/2013 2 நிமிட வாசிப்பு Updated: 18/01/2014 சினிமா
எழுத்து அளவு:
உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து,  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக்  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்ஷரா..  அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார்.

Akshara‘நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்தத் தருணம் என் திரை உலகப் பயணத்தின் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம், திரை அரங்கில் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது  தான் தெரிந்தது.  பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.  அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிட்டி இருப்பதற்கும் அவரே காரணம். அவர் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன். ‘ஆரம்பம்’ நாட்களை நான் என்றும் நினைவில் கொள்வேன். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நான் ஒரு பரத கலைஞர். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் ஹிந்தி பதிப்பான ‘ரேங் ரேஸ் (Rang Race)’ படத்தில்  நடித்து உள்ளேன். எனக்குப் பிடித்த நடிகர் ஹாலிவுட்  நடிகர் Bradley Cooper. பிடித்த நடிகை கரீனா கபூர். அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டுக்கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள். விளையாட்டுத்துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டுத்துறையில் உள்ளதனாலோ   என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ்த்திரையுலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் ‘ என்கிறார்  அக்ஷரா.  

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க