இது தமிழ் ⚡ AMP

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ இல் இணையும் நடிகர் ஆதி

By Dinesh R | Feb 08, 2025

நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 ‘அகாண்டா 2: தாண்டவம்’ படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்‌ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை, எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.

திறமைமிகு முன்னணி இளம் நடிகரான ஆதி பினிசெட்டி இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன் ‘சர்ரைனோடு’ படத்தில் ஆதியை ஒரு அழுத்தமான வேடத்தில் காட்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு அற்புதமான பாத்திரத்தில் அவரைக் காட்டவுள்ளார்.

ஆதி பினிசெட்டி மற்றும் பாலகிருஷ்ணா இடையே அதிரடியான காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். தற்போது, அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கரில் கலை இயக்குநர் ஏ.எஸ்.பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான, பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட செட்டில் படத்தின் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சன் காட்சிகளைப் புகழ்பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர்களான ராம்-லக்ஷ்மணன் உருவாக்கி வருகிறார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டாம் பாகத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். இது மிகப் பெரிய பட்ஜெட்டில், மிகப் பெரிய அளவில் உருவாகிறது. இசையமைப்பாளர் எஸ் தமன், ஒளிப்பதிவாளர் சி ராம்பிரசாத், படத்தொகுப்பாளர் தம்மிராஜு மற்றும் கலை இயக்குநர் ஏஎஸ் பிரகாஷ் உட்பட அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திறமையான குழு இந்தப் படத்தில் பணியாற்றுகிறது.

அகண்டா 2 பான் இந்தியா வெளியீடாக வெளியாகவுள்ளது. தசரா பண்டிகையையொட்டி, செப்டம்பர் 25, 2025 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்:-

நந்தமுரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதி பினிசெட்டி

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து & இயக்கம் – போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் – ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் – 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் – எம் தேஜஸ்வினி நந்தமுரி
இசை – தமன் எஸ்
ஒளிப்பதிவு – சி ராம்பிரசாத், சந்தோஷ் டி டெடகே
கலை – ஏ.எஸ்.பிரகாஷ்
படத்தொகுப்பு – தம்மிராஜு
சண்டை – ராம் லக்ஷ்மணன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்