இது தமிழ் ⚡ AMP

குணசித்திர நடிகர் லதா ராவ்

By Dinesh R | Aug 07, 2018

கடிகார மனிதர்கள் படத்தில், கிஷோருக்கு ஜோடியாக மிக யதார்த்தமானதொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் லதா ராவ். சின்ன வீட்டில், வீட்டு உரிமையாளருக்குப் பயந்து, கணவனின் நிலை உணர்ந்து அனுசரணையாக இருக்கும் அன்பான மனைவி பாத்திரத்திக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். தென்னிந்தியத் தொடர்களில் நான்கு மொழிகளிலிலுமே தஒன்றி, சின்னத்திரையில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிப் திரைப்படங்களில் வாய்ப்பினைத் தேடி வந்தார்.

முதன்முதலில் வடிவேலுக்கு ஜோடியாக, 2010 இல் வெளிவந்த ‘தில்லாலங்கடி’ என்ற படத்தில் உஷா எனும் காமெடிக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ போல பல படங்களில் நடித்துள்ளார். எனினும், இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பரவலான கவனத்தையும் பாராட்டையும் லதா ராவிற்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.

அப்படம் கொடுத்த நம்பிக்கையில், “தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திரப் பாத்திரங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன் லதா ராவ்.

அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8, விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.