இது தமிழ் ⚡ AMP

காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

By Dinesh R | Dec 05, 2022

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ .

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசுகிறப் படமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்தக் கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா, எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறபடமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கம்ர்ஷியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஜெய் அமர்சிங். இந்தப் படத்தைப் பார்த்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்தப் படத்தைப் பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

PVR, இந்தப் படத்தை வெளியீடு செய்கிறார்கள். MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன், சரத் ஆகியோருடன் ஈணைந்து ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். டிசம்பர் 30 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது.

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

>> இசை – ஆப்ரோ
>> ஒளிப்பதிவு– கார்த்திக் சுப்ரமணியம்
>> படத்தொகுப்பாளர்– அசோக்