இது தமிழ் ⚡ AMP

விரைவில் புதிய பட அறிவிப்பு – கெளரவ் நாராயணன்

By Dinesh R | Aug 12, 2019

கதையின் தன்மையையும், திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் கௌரவ் நாராயணன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எதார்த்த வாழ்வியலுக்குத் “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்குச் “சிகரம் தோடு”, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” எனப் படத்திற்குப் படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குநர் கௌரவ் நாராயணன்.

இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தித் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்.