அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாகத் தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது தடம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தைப் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
விளம்பரம்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் தணிக்கைக் குழுவினருக்குக் காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தைத் தணிக்கைக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியதில் குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நிகழவுள்ளது.