இது தமிழ் ⚡ AMP

பிரேம்குமார் – ஃபஹத் ஃபாசில் இணையும் ‘அசரீரி’

By Dinesh R | Nov 24, 2026

‘’96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க குமார் கங்கப்பன் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.

த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் ‘அசரீரி’ திரைப்படம் 2027 ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.