இது தமிழ் ⚡ AMP

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

By Dinesh R | Nov 14, 2025

இறக்க மறுக்கும் அழிவில்லாத நாயகனான கோஷேய், முதல்பாகமான சிசு (SISU) படத்தில், தங்கக்கட்டிகளுக்காக நாஜிக்களை துவம்சம் செய்திருப்பார். நவம்பர் 21 வெளிகாயவுள்ள அதன் அடுத்த பாகத்தில், தன் குடும்பத்தைக் கொன்ற இரஷ்ய இராணுவ வீரரைப் பழிவாங்கக் களம் இறங்குகிறார் நாயகன். மனித இனத்தின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்றான பழிவாங்கும் உணர்ச்சிதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே ரத்தம் தகிக்கும் அந்தத் தகிப்பினை உணர முடிகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு மனிதனின் அந்தப் பழி வாங்கும் தகிப்பைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஜோர்மா தோமிலாவின் நடிப்பை மிகவும் சிலாகிக்கிறார் இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர். ஆவர், “ஜோர்மாவுடன் வேலை செய்வது எப்போதும் ஓர் இனிமையான உணர்வைத் தரும். அவர் தனக்கே உரிய தனித்துவமான முறையில், முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வந்துவிடுவார். குறிப்பாகக் கோபத்தையும் சோகத்தையும் வசன உதவியின்றியே அவரால் வெளிப்படுத்திவிட இயலும். நம்மால் ஆட்டாமி எனும் கதாபாத்திரம் எத்தகைய உணர்ச்சி நிலைக்கு ஆட்பட்டிருக்கார் என்பதை அவரது முகத்தாலும் உடற்மொழியாலுமே உணர்ந்து கொள்ளமுடியும்” என்றார்.

தானேற்று நடித்த ஆட்டாமி கோர்பி எனும் கதாபாத்திரம் குறித்து, “போர் தொடங்கும் வரை அவன் குடும்பஸ்தனாக இருந்தான். பிறகு எல்லாம் மாறியது. இழக்க இனி எதுவுமே இல்லை எனுமளவுக்கு அனைத்தையும் இழந்துவிடுகிறான். ஆனால், இந்தப் படத்தில், வாழ்வதற்கான புது நோக்கத்தைக் கண்டடைகிறான். தனக்கு இன்னும் ஓர் எதிர்காலம் எஞ்சியிருப்பதாகக் கருதுகிறான்” என்றார் ஜோர்மா தோமிலா.

முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது ‘சிசு: ரோடு டு ரெவன்ஜ்’. தனது குடும்பம் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்ட வீட்டிற்கு வருகிறான் நாயகன். அந்த மர வீட்டைப் பிரித்து, பலகைகளை வண்டியில் அடுக்கிக் கொண்டு, அவர்கள் நினைவாக எங்கேனும் ஓரிடத்தில் மறுகட்டுமானம் செய்து கொள்ள நினைக்கிறான். ஆனால், அவரது குடும்பத்தைக் கொன்ற செம்படையின் தளபதியான ஏகோர் டிராகனோவ் குறுக்கிடுகிறார். நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட, மரணத்திற்கான ஒரு துவந்த சண்டை இருவருக்குள்ளும் நடக்கிறது.

இந்தியாவில், இப்படத்தை, நவம்பர் 21 ஆம் தேதி அன்று சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.