குதூகலங்களுக்கான ஒற்றைச் சேருமிடமாகத் திகழும் இந்த சவாரி, பல்வேறு சோனி YAY! கருத்தாக்கங்கள் கொண்ட விளையாட்டுகள், குதூகலமூட்டும் புதிர்கள், போட்டிகள் மற்றும் பரிசுகளைக் கொண்டிருக்கும். பொப்பட்ஸ் டிராமா, குரூஸ் மியூஸிக், போலேஸ் இன்னசன்ஸ் மற்றும் ஹனி-பன்னீஸ் மிஸ்சிஃப் என குழந்தைகளின் விருப்பமான கதாபாத்திரங்களை இது கொண்டு வரவுள்ளது. இந்தக் குதூகலமான பயணம் சென்னையில் துவங்கி வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி வழியாகப் பயணித்துக் குழந்தைகள் மத்தியில் கொண்டாடவுள்ளது.
குதூகலங்கள் இத்தோடு முடியவில்லை! பாரி திவாளி-யின் ஒரு பகுதியாக, இந்தச் சேனல் தொடர்ந்து அக்டோபர் மாதம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளின் வழியாக மகிழ்ச்சியைப் பரப்பவுள்ளது. அதில், முதல் முறையாகத் தொலைக்காட்சித் திரைப்படமாக ‘சப் ஜோல்மால் ஹை – பேங்க் ராபரி’ ஒளிபரப்பாகிறது. டைகர் ஷெரோஃப் முதல் முறையாக ப்ரொஃபசர் வேடத்தில் நடிக்கும், காட்டும், “ஜோல்மால் பாடஷாலா” மற்றும் சேனலின் முதன்மை ஷோக்களான “சப் ஜோல்மால் ஹை” மற்றும் “குரு அவுள் போல்” ஆகியவற்றின் புதிய அத்தியாயங்கள் ஆகியவையும் ஒளிபரப்பாகவுள்ளன.
கொண்டாடவும் குதூகலிக்கவும் தயாராகுங்கள். ‘ஜோல்மால் பாரி சவாரி’ இதோ வந்துவிட்டது.