Shadow

குழந்தைகளைக் குதூகலப்படுத்த வரும் சோனி

Sonyசோனி YAY! – அதன் முதலாவது தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அதன் நேயர்களின் வாழ்வில் கூடுதல் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவுள்ளது. சோனி YAY! என்பது 2 வயது 14 வயது குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ள சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸின் புதிய சேனலாகும். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள தனது நேயர்களுக்குக் மகிழ்ச்சியையும் புன்னகையையும் வழங்கும் வகையில், “ஜோல்மால் பாரி திவாளி” என்னும் பெயரில் ஒரு தனித்துவமிக்க செயல்திட்டத்தினை அறிவித்துள்ளது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தச் சேனல் துவங்கியுள்ள ‘ஜோல்மால் பாரி சவாரி’, ஆயிரக்கணக்கான குழந்தைகளை அடைந்துகுதூகலிக்கச் செய்யவுள்ளது.

குதூகலங்களுக்கான ஒற்றைச் சேருமிடமாகத் திகழும் இந்த சவாரி, பல்வேறு சோனி YAY! கருத்தாக்கங்கள் கொண்ட விளையாட்டுகள், குதூகலமூட்டும் புதிர்கள், போட்டிகள் மற்றும் பரிசுகளைக் கொண்டிருக்கும். பொப்பட்ஸ் டிராமா, குரூஸ் மியூஸிக், போலேஸ் இன்னசன்ஸ் மற்றும் ஹனி-பன்னீஸ் மிஸ்சிஃப் என குழந்தைகளின் விருப்பமான கதாபாத்திரங்களை இது கொண்டு வரவுள்ளது. இந்தக் குதூகலமான பயணம் சென்னையில் துவங்கி வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி வழியாகப் பயணித்துக் குழந்தைகள் மத்தியில் கொண்டாடவுள்ளது.

குதூகலங்கள் இத்தோடு முடியவில்லை! பாரி திவாளி-யின் ஒரு பகுதியாக, இந்தச் சேனல் தொடர்ந்து அக்டோபர் மாதம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளின் வழியாக மகிழ்ச்சியைப் பரப்பவுள்ளது. அதில், முதல் முறையாகத் தொலைக்காட்சித் திரைப்படமாக ‘சப் ஜோல்மால் ஹை – பேங்க் ராபரி’ ஒளிபரப்பாகிறது. டைகர் ஷெரோஃப் முதல் முறையாக ப்ரொஃபசர் வேடத்தில் நடிக்கும், காட்டும், “ஜோல்மால் பாடஷாலா” மற்றும் சேனலின் முதன்மை ஷோக்களான “சப் ஜோல்மால் ஹை” மற்றும் “குரு அவுள் போல்” ஆகியவற்றின் புதிய அத்தியாயங்கள் ஆகியவையும் ஒளிபரப்பாகவுள்ளன.

கொண்டாடவும் குதூகலிக்கவும் தயாராகுங்கள். ‘ஜோல்மால் பாரி சவாரி’ இதோ வந்துவிட்டது.