இது தமிழ் ⚡ AMP

KGFஇன் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் சுதா கொங்கரா

By Dinesh R | Apr 21, 2022

மிகத் தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களைத் தந்து கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பேல் பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உட்பட, சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சூரரைப் போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தைத் துவங்கவிருக்கிறார்.