இது தமிழ் ⚡ AMP

ஜுமான்ஜியின் அடுத்த கட்டம்

By Dinesh R | Nov 24, 2019

ராக் நடிப்பில் வெளிவந்த ஜுமான்ஜி படம் சக்கை போடுபோட்டது. அதைத் தொடர்ந்து, ‘ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்‘  என்கிற படம் டிசம்பர் 13 அன்று வெளிவருகிறது. க்றிஸ் எழுதிய 2 புத்தகங்களின் அடிப்படையில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை, ஜுமான்ஜி (1995), ஜதுரா: என் ஸ்பேஸ் அட்வன்ச்சர் (2005) மற்றும் ஜுமான்ஜி: வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம் (2017) ஆகும். அம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஜுமான்ஜி, 1996 முதல் 1999 வரை ஒரு தொலைக்காட்சித் தொடரகவும் ஒளிபரப்பப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2017 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்றிருந்த அந்த 4 இளம் மாணவர்கள், அடுத்த கட்ட அதிரடி ஆக்‌ஷனுக்கு தற்சமயம் தயார் நிலைக்கு வந்துவிட்டார்கள்! ஸ்பென்சரின் (அலெக் உல்ஃப்) நகர்வொன்றில், ஜுமான்ஜி விளையாட்டு மீண்டும் துளிர் விடுகிறது. இதர நண்பர்கள், பெத்தானி (மேடிசன் இஸ்மேன்), ஃப்ரிட்ஜ் (செர்டாருஸ் ப்ளெயின்) மற்றும் மார்த்தா (மார்கன் டர்னர்) ஆகியோர் ஸ்பென்சர் காணாமல் போய்விட்டதை உணர, ஸ்பென்சரின் தாத்தா எடி (டானி டி வோடோ) மற்றும் அவரது நண்பர் மிலோ வாக்கர் (டானி க்ளோவர்) ஆகிய இருவரும்கூட களத்தில் இறங்குகிறார்கள். விளையாட்டின் புதிய பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அனைவரும் தத்தம் நகர்வுகளை நகர்த்திவிட முற்படுகிறார்கள்.

ஸ்பென்சரை மீட்டு வருவதில்லாமல், அவ்விளையாட்டிலிருந்து முழுமையாக விலகுவதே அவர்கள் அனைவரது இலக்கு. வ்ரெஸ்ட்லிங் புகழ் ராக்கான ட்வானே ஜான்சன், புதைபொருள் ஆராய்ச்சியாளராக வருகிறார். ஜால் பிளாக்கும் முக்கியதொரு வேடத்தில் தோன்றுகிறார். இம்முறையும், ஆக்ஷனிலும் சாகசத்திலும் குழந்தைகளை மகிழ்வித்து, வசூலில் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.