இது தமிழ் ⚡ AMP

தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை

By Dinesh R | Aug 12, 2025

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (NFDC), இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் (NFAI) இணைந்து, ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசபக்தி திரைப்பட விழா’ நிகழ்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்ட பின், 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ‘ஷாஹீத் (1965)’ திரைப்படம் திரையிடப்பட்டது. திரையிடத் திட்டமிடப்பட்ட 11 படங்களில், 7 முழு நீள திரைப்படங்களும், 4 ஆவணப்படங்களும் அடக்கம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திரைப்படத் தயாரிப்பாளர் வசந்த், நடனக் கலைஞர் கலா மாஸ்டர், தமிழ் வர்த்தக சபையைச் சேர்ந்த சோழ நாச்சியார், நடிகர் வீரா & நடிகை நமீதா, சங்கீத வித்வான் டாக்டர் ஏ.வி.எஸ். சிவகுமார் ஆகியோர் பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர். சென்னை NFDC-இன் துணை பொது மேலாளர் மகேஷ் யாதவ் விருந்தினர்களை வரவேற்றார். 

பி.ஆர். பந்துலுவின் ‘வீர பாண்டிய கட்டபொம்மன் (1959)’ மற்றும் ‘பராசக்தி (1952)’ ஆகிய தமிழ்ப்படங்களும் திட்டமிடப்பட்ட படங்களின் பட்டியலில் உள்ளன. இரண்டுமே நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்தவை. ‘சாத் இந்துஸ்தானி (1969)’ திரைப்படத்தை இறுதியாக ஒளிபரப்புகிறார்கள்.

திங்கள் (ஆகஸ்ட் 11):-

செவ்வாய் (ஆகஸ்ட் 12):-

புதன் (ஆகஸ்ட் 13):-