32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை

Dinesh R சேலம் Published: 12/08/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/08/2025 சினிமா
எழுத்து அளவு:

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (NFDC), இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் (NFAI) இணைந்து, ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசபக்தி திரைப்பட விழா’ நிகழ்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்ட பின், 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ‘ஷாஹீத் (1965)’ திரைப்படம் திரையிடப்பட்டது. திரையிடத் திட்டமிடப்பட்ட 11 படங்களில், 7 முழு நீள திரைப்படங்களும், 4 ஆவணப்படங்களும் அடக்கம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திரைப்படத் தயாரிப்பாளர் வசந்த், நடனக் கலைஞர் கலா மாஸ்டர், தமிழ் வர்த்தக சபையைச் சேர்ந்த சோழ நாச்சியார், நடிகர் வீரா & நடிகை நமீதா, சங்கீத வித்வான் டாக்டர் ஏ.வி.எஸ். சிவகுமார் ஆகியோர் பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர். சென்னை NFDC-இன் துணை பொது மேலாளர் மகேஷ் யாதவ் விருந்தினர்களை வரவேற்றார். 

பி.ஆர். பந்துலுவின் ‘வீர பாண்டிய கட்டபொம்மன் (1959)’ மற்றும் ‘பராசக்தி (1952)’ ஆகிய தமிழ்ப்படங்களும் திட்டமிடப்பட்ட படங்களின் பட்டியலில் உள்ளன. இரண்டுமே நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்தவை. ‘சாத் இந்துஸ்தானி (1969)’ திரைப்படத்தை இறுதியாக ஒளிபரப்புகிறார்கள்.

திங்கள் (ஆகஸ்ட் 11):-

  • Shaheed (1965) – S. ராம் ஷர்மா
  • Swatantra Veer Savarkar (2023) – ரந்தீப் ஹூடா

செவ்வாய் (ஆகஸ்ட் 12):-

  • ஆவணப்படம்: Our Flag, 1952 – S.D.Puri
  • Uri: The Surgical Strike (2019) – Aditya Dhar
  • ஆவணப்படம்: Netaji Subhash Chandra Bose (1973) – அருண் செளத்ரி
  • வீரப்பாண்டிய கட்டபொம்மன் (1959) – B.R.பந்தலு
  • ஆவணப்படம்: Shahadat (2001) – முகேஷ் சந்திரா

புதன் (ஆகஸ்ட் 13):-

  • Tanhaji (20202) – Om Raut
  • ஆவணப்படம்: Tilak (1957) – Vishram Bedekar
  • Saat Hindustani (1969) – K. Abbas
Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.