இது தமிழ் ⚡ AMP

ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி

By Dinesh R | Sep 27, 2017

விக்ரம் வேதாவிற்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படம், படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு சான்று” என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயிஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.